மாணவர்களுக்கு மாதம் 1750 ரூபாய் உதவித்தொகை.! இலவச தொழிற்பயிற்சிக்கு அழைக்கும் தமிழக அரசு

Published : Jun 21, 2025, 12:11 PM ISTUpdated : Jun 21, 2025, 12:14 PM IST
TAMILNADU STUDENT AI IMAGE

சுருக்கம்

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாதம் ₹750 உதவித்தொகையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் ₹1000ம் வழங்கப்படுகிறது.

Tamilnadu student scholarship programs : தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை கல்வி, பொருளாதார உதவி, உடல்நலம் மற்றும் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் கல்வியில் கவனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி சேர்க்கை எண்ணிக்கை 27% உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டங்கள்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்விக் கட்டணம், விடுதி, உணவு செலவுகளை அரசே ஏற்கிறது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர் கல்வியை அணுகுவதற்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு 13 வகையான உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்த உதவித்தொகைகள் 1-ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்களைச் செலுத்த உதவுகின்றன. இது போன்று பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் மாணவர்களின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர் இந்த உதவித்தொகைக்கு பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

தொழிற்பயிற்சி மற்றும் உதவித்தொகை திட்டம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரில் 2025- ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. Electrician. Electronics Mechanic. Technician Medical Electronics Computer Operator & Programming Assistant ஆகிய நான்கு தொழில் பிரிவுகளில் பயிற்சி நடைபெற்று வருகிறது.10 ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மற்றும் 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற (அ) தோல்வியுற்ற மாணவ /மாணவியர்களுக்கு நேரடி சேர்க்கை 17.06.2025 முதல் நடைபெற்ற வருகிறது.

தொழிற்பயிற்சியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இந்நிலையத்தில் சேர விரும்பும் மாணவ / மாணவியர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி (மகளிர்) வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரை நேரடியாக அணுகலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கு மத்திய மாநில அரசு நிறுவனங்களில் (NAC) பயிற்சி ஏற்படுத்தி தரப்படும் மேலும் முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.

 பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லா பயிற்சி, மாதாந்திர உதவித்தொகையாக ரூ-750/- (அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு தமிழ் புதல்வன் மற்றம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ. 1000) கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும். மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை, பாடப்புத்தகம், சீருடைகள் மற்றும் வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!