
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65). அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு லித்திஸ்கா (7), தீப்தி (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு
இந்நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டி உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தாய் காளீஸ்வரிக்கு தெரியவந்ததை அடுத்து மகளை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளாார்.
வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்த தாய்
இந்நிலையில், இரண்டு மகளை தவிக்கவிட்டு பவித்ரா நேற்று மாலை 6 மணியளவில் பெயிண்டருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி (45), அவரது தாய் செல்லம்மாள் (65) ஆகியோர் தற்கொலை செய்துள்ள முடிவெடுத்தனர். அதன்படி லித்திக்ஸா, தீப்தியை இருவரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து, செல்லமாளும், அவரது மகள் காளீஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவமானத்தில் குடும்பம் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.