அரசின் தவறான அணுகுமுறையால் பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அரசு வாங்குவதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மின் கட்டண உயர்வு- பாஜக போராட்டம்
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாகவும், அதற்கான கட்டண விகிதத்தை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நேற்று(23.07.2022)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் பாஜக சார்பில் கோ.புதூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின் கட்டணத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,. பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மின்சாரம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மின்சாரம் தயாரிப்பதில் பிற மாநிலங்களை விட முன்னனியில் தமிழகம் இருந்ததாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மின் கட்டணம் கம்மியா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது என்ன?
அதிக விலைக்கு மின்சாரம் வாக்கும் தமிழகம்
நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தமாரிப்பதில் தகுதி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளதாக தெரிவித்தவர், ஆனால் இன்றைய திமுக அரசின் தவறான அணுகுமுறையால் மின்சாரத்தை பிற மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டதாக கூறினார். தமிழகம் மொத்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 56 சதவீதம். ஒருபடி பானையில் அரை படி மின்சாரத்தையே தமிழகம் தயார் செய்கிறது என கூறினார். தமிழகத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கர்நாடகா, கேரளாவுக்கு 4 ரூபாய் 50 காசுக்கு மின்சாரத்தை கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் ரூ 14 முதல் 20ரூபாய் வரை விலைகொடுத்து மின்சாரத்தை வெளியில் இருந்து தமிழகம் வாங்குவதாக குற்றம்சாட்டினார். இங்கு விளைந்ததை வைத்து சமைக்க மாட்டேன் எனக்கூறிவிட்டு ரிலையன்சில் வாங்கி சமைப்பது போல மின்சாரத்தை வெளியே குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகின்றனர் என குறிப்பிட்டார்.
63 லட்சம் வீடுகள் பாதிப்பு
தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதற்காக 450 கோடியில் மின்சாரத்தை இறக்குமதி செய்து, 20ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தப்போகிறார்கள் என கூறினார். இவர்கள் செய்த கொள்ளைக்கு, தமிழக மக்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். மின் கட்டண உயர்வால் 63லட்சத்து 35 வீடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தவர், விவசாயிகளுக்கான மின் கட்டணத்தை 1970ல் திமுக ஆட்சியின் போது உயர்த்தியதாக தெரிவித்தவர், அப்போது மிகப்பெரிய போராட்டமாக வெடித்து 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறினார். எனவே 1970ல் நடந்த போராட்டத்திற்கு மக்கள் திரும்பி விடக்கூடாது எனவும், எனவே தேவையற்ற பாரத்தை தமிழக மக்கள் மீது அரசு ஏற்றக்கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!