Latest Videos

இபிஎஸ் கண் முன்னால் சரிந்து விழுந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்! பதறிய அதிமுக எம்எல்ஏக்கள்! நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Jun 26, 2024, 11:29 AM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: ADMK : கடும் அமளி.. சட்டசபையில் இருந்து அதிமுக கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்.! சபாநாயாகர் அதிரடி அறிவிப்பு

இதனையடுத்து சபாநாயகர் அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபின் அவரது அறையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:  புள்ளி விவரத்தை வெளியிட்டு ஆளுங்கட்சியின் வயிற்றில் புளியை கரைக்கும் தமிழக பாஜக.!

அப்போது, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்தார். இதையடுத்து தலைமைச்செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ. சி விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

click me!