சென்னையில் கொளத்துாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவான ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கொளத்துாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ திமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், முரளி, உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து 3 வருடமாகிவிட்டது; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்? தினகரன் கேள்வி
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படிங்க: இதெல்லாம் ஏமாற்று வேலை.. திமுகவின் முழு நேர தொழிலே இதுதான்.. இறங்கி அடிக்கும் அன்புமணி!
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து சிபிஐ மற்றும் ரெங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.