Breaking News : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்

By Ajmal Khan  |  First Published Jan 3, 2024, 11:41 AM IST

திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நிலை பாதிப்பால் சென்னையில் இன்று காலமானார்


கு.க.செல்வம் காலமானார்

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் கு.க.செல்வம், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலளார் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் பதவி கிடைக்காத காரணத்தால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து அங்கு சிறிது காலமே இருந்தவர் மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை உயிர் இழந்தார். அவரது மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.! என்ன காரணம் தெரியுமா.?

click me!