குடும்பத் தகராறில் புகைப்பட பத்திரிகையாளர் தற்கொலை!

 
Published : Sep 20, 2017, 08:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
குடும்பத் தகராறில் புகைப்பட பத்திரிகையாளர் தற்கொலை!

சுருக்கம்

former dinamalar photographer anand suicide in madurai

மதுரையில் பத்திரிக்கை போட்டோகிராபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 40). பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகப் பணியாற்றியவர். கடைசியாக தினமலர் பத்திரிகையில் புகைப்பட நிருபராகப் பணியாற்றி நான்கு மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து நின்றுவிட்டார்.  இவர் இன்று மதியம், மதுரை ஐராவதநல்லூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

குடும்பத்தகராறில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இவருக்கு ஒரு மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருடைய 10  வயது மகன் ஒருவர் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அந்த வருத்தத்தில் இருந்த ஆனந்த், இன்று தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!