
சிவகங்கை அருகே வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை அடுத்த மணலூரைச் சேர்ந்தவர் ஜெயமுத்து. தொடக்கப்பள்ளியில் படித்து வந்த இவரது மகன் லிங்கேஸ்வரன் இன்று மாலை மொட்டைமாடியில் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக லிங்கேஸ்வரன் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கிக் கொண்டான். இதில் சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்து வந்து போலீசாருக்கும் மின்சார அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின் இணைப்பை நிறுத்தி சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.