முதல்வருக்கு சேலை அனுப்பியவர்கள் கைது!

 
Published : Sep 20, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
முதல்வருக்கு சேலை அனுப்பியவர்கள் கைது!

சுருக்கம்

Arrested and sent to the CM sari

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு சேலை அனுப்பியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுரை சென்றார். அங்கு காவிரி மகா புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை, மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி இன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு சேலை அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு சேலை அனுப்பிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள், எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!