ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நிலை பாதிப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். செரிமானம் பிரச்சனை காரணமாக திட உணவுகள் செரிக்காமல் அவதி அடைந்திருந்தார். இதன் காரணமாக திரவ பொருட்களையே உணவாக அருந்தி வந்தார். இதனால் அவருக்கு அவ்வப்போது உடல்சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் கடந்த 5 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையே நீடித்து வந்தது.
சிகிச்சைக்காக ஜெர்மனி பயணம்
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் செரிமான பிரச்னைக்கு சிறந்த முனையில் உயர் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மனி நாட்டில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராஜாத்தி அம்மாளுக்கு அப்பல்லோ டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்தநிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் தனது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு ராஜாத்தி அம்மாள் ஜெர்மனி புறப்பட்டு சென்றார். செப்டம்பர் முதல் வாரம் வரை ஜெர்மனியில் தங்கியிருந்து சிகிச்சை பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு.. சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார் கனிமொழி !
முதலமைச்சர் ஸ்டாலின் உதவி
ராஜாத்தி அம்மாளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனையடுத்து தான் சிகிச்சைக்காக தனது மகள் கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாள் ஜெர்மனி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.