அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் அதிரடி கைது.. என்ன காரணம்?

By Ramya s  |  First Published Jun 26, 2023, 9:33 AM IST

மதுரை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.


மதுரை மாவட்டம் கருவனூரில் உள்ள பத்திரகாளியமன் பாறைக் கருப்பு அய்யனார் கோயில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக விழாவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்த்ன் மருமகன் பழனிகுமாருக்கும் திமுகவை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊர் பொதுமக்கள் அதில் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர்.

இந்த சூழலில் இந்த முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னமலத்தின் வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் தாக்குதலில் ஈடுபட்டத். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பொன்னம்பலத்தின் காருக்கும் அந்த கும்பல் தீ வைத்ததில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தாக்குதல்களில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிகுமார், சுப்பையா, சூர்யா உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

குழந்தை திருமணம் செய்தேன் என கூறிய ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

இதுகுறித்து பழனிகுமார் அளித்த புகாரின் பேரில், திமுகவை சேர்ந்த வேல்முருகன், அருண், படையப்பா, கவியரசன், வல்லரசு உள்ளிட்டோர் மீது சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கருவனூரில் 50-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன், திரு.பொன்னம்பலம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னபலத்துடன் அவரின் 2 மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்பவனை சுத்தமாக வைப்பது தான் ஆளுநரின் வேலை.. அதை மட்டும் பாருங்கள்.. இறங்கி அடிக்கும் தயாநிதி மாறன்.!

click me!