மத்திய அரசின் புதிய விதி.. பீக் ஹவுர்ஸில் மின் கட்டணம் உயருமா? மக்களுக்கு குட்நியூஸ் சொன்ன மின்சார வாரியம்..

Published : Jun 26, 2023, 08:39 AM ISTUpdated : Jun 26, 2023, 09:04 AM IST
மத்திய அரசின் புதிய விதி.. பீக் ஹவுர்ஸில் மின் கட்டணம் உயருமா? மக்களுக்கு குட்நியூஸ் சொன்ன மின்சார வாரியம்..

சுருக்கம்

நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மின் கட்டண விதிகள் தொடர்பாக மத்திய அரசு செய்த திருத்தங்களால் மின் கட்டணம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கோடைக் காலத்தில் உங்கள் மின் கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நேரத்திற்கேற்ப மின் கட்டனம் நிர்ணயம் செய்யப்படும் முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020-ல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் ஏற்படும்.

அதன்படி, மின்சாரத்திற்கு அதிக தேவை இருக்கும் பீக் ஹவர்ஸில் (Peak hours) உதாரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி வரையிலும் மின் கட்டணம் வழக்கதை விட 10 முதல் 20% அதிகமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் சாதாரண நேரத்தில் மின் கட்டணம் 10 முதல் 20% வரை குறைவாக இருக்கும்.

 

கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி! வேதனையில் இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

ஆனால் அதே நேரத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் மின் கட்டணம் மாறுபடும். அதன்படி, சூரிய ஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில், வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% - 20% குறைவாக வசூலிக்கப்படும். 20214, ஏப்ரல் 1 முதல் மற்றும் தொழில்முறை நுகர்வோருக்கு இந்த கட்டண முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோடைக் காலத்தில் குறிப்பாக இரவில் ஏசி மற்றும் பயன்படுத்த அதிக செலவு ஏற்படும், அதாவது காலை நேரத்தில் ஏசி மற்றும் கூலர்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் குறைவாக இருக்கும், ஆனால் பீக் ஹவர்ஸில் அதாவது இரவில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இது உங்கள் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திய பிறகு, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டண முறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கூட்டணம் கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்த திருத்ததால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள். 

இடியுடன் கூடிய மழை பெய்யும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை..

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!