அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம்! ஈபிஎஸ் அஞ்சலி!

Published : Apr 24, 2025, 11:06 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம்! ஈபிஎஸ் அஞ்சலி!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Gokula Indira's Husband Passes Away: அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா. இவரது கணவர் சந்திர சேகர். அதிமுக நிர்வாகியான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர சேகர் இன்று உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்க முடியாத கோகுல இந்திரா கதறி அழுதார்.

கோகுல இந்திரா கணவர் மரணம் 

சந்திர சேகர் மரணம் அடைந்ததை அறிந்ததும் அதிமுக நிர்வாகிகள் கோகுல இந்திராவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் சந்திர சேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சந்திர சேகர் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட குட்நியூஸ்!

எடப்பாடி பழனிசாமி இரங்கல் 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்களுடைய கணவர் A.R. சந்திரசேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும்

பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

எடப்பாடியை வணங்கி உரையை தொடங்கிய செங்கோட்டையன்.! ஆச்சர்யத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!