வரலாற்றில் முதல் முறையாக காவலர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை - சைலேந்திர பாபு பெருமிதம்

By Velmurugan sFirst Published May 25, 2023, 6:30 PM IST
Highlights

தமிழகத்தில் முதன் முறையாக காவல் துறையில் காவலர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உதகையில்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உதகை பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயகுமார் தலைமையில் தமிழ்நாட்டில் வசிக்க கூடிய பழங்குடியினர்களின் நிலை குறித்து சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நடத்த கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கப்பட்டது. பழங்குடியினர்களின் வாழ்வியல் முறை, எவ்வாறு அவர்களது வழக்குகள் குறித்து கையாள வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் இன்று உதகையில் துவங்கியது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு  காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பழங்குடியினர் வாழ்வியல் முறையில் சிறு வயது திருமணம் காலம் காலமாக நடக்கும் ஒரு முறையாக உள்ளது. இதனால் அவர்கள்  பெற்றோர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் உட்பட பலர் கைது செய்யப்படுகின்றனர்.

18 வயது பூர்த்தி அடைந்த ஒரே வாரத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி

அண்மையில் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. அதன்படி பழங்குடியினர் சிறுவயது திருமணம் போன்ற விஷயங்களை கையாளும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து நகர மத்திய காவல் நிலையத்தை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு, காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சைலேந்திரபாபு:-  பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்தும், 9 மாநகராட்சிகளை சேர்ந்த 40 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

தமிழ்நாட்டில் 1.2% பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சென்ற ஆண்டு பழங்குடியினர்கள் மீது தாக்குதல் நடத்திய 75 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பழங்குடியினர்களின்  2 ஆயிரத்து 600 ஜாதி சான்றிதழ்களை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு நடத்தி ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு  போன்றவற்றைக்கு சென்றடைய  காவல்துறையினர் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

தஞ்சையில் மணல் லாரி மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்;  2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மேலும் கடந்தாண்டு காவல்துறையில் புதிதாக 10,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தற்போது 3500 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.  போலி சான்றிதழ்கள் மூலம் கல்லூரி மற்றும் அரசு வேலைகளில் முறைகேடாக பழங்குடியினர்கள் சான்றிதழ்களை பெற்று நுழையும் நபர்களை கள ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் காவல்த் துறை வரலாற்றில் முதல் முறையாக காவலர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகியுள்ளதாக சைலேந்திரபாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

click me!