“சாராயக்கடை சந்து” திருச்சியில் தெருவுக்கு சர்ச்சை பெயர் சூட்டிய அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published May 25, 2023, 6:11 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் ஒரு தெருவிற்கு சாராயக்கடை சந்து என அதிகாரிகளால் வைக்கப்பட்ட பெயர் பலகை இணையத்தில் வைரலாகி வருகிறது.


திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டு பகுதியில்  அரசு பதிவேட்டில்  பதிவாகியுள்ள  ஒரு வீதிக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் சாராயக்கடை சந்து என பெயர் பலகை வைக்கப்பட்டது. சாராயக்கடை சந்து பெயர் பலகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் தற்காலிகமாக சாராயக்கடை சந்து பெயர் பலகையை  லால்குடி நகராட்சி நிர்வாகம் மறைத்துள்ளது.

லால்குடியில் உள்ள சிவன் கோயில் அருகே நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் உள்ள ஒரு வீதிக்கு பெயர் சாராயக்கடை சந்து. இந்த வீதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் சாராயம் விற்று வந்ததால் இந்த வீதிக்கு சாராயக்கடை சந்து என பெயர் வைத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

4 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்ற மாம்பழத் தேரோட்டம்

 அதற்குப் பின்னர் இந்தப் பெயரால் அந்த பகுதி  பலிவேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிலரது முயற்சியால் இந்த வீதிக்கு ராமசாமி பிள்ளை வீதி என பெயர் மாற்றப்பட்டது. அது ஒரு சமூகத்தின் பெயராக இருந்ததால் பின்னாளில்  அது பழைய பெயரான சாராயக்கடை சந்து என மீண்டும் பெயர் மாறியுள்ளது.

தஞ்சையில் மணல் லாரி மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்;  2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

அரசு பதிவேட்டிலும்  சாராயக்கடை சந்து  எனவே பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீதியின் பெயரை சிலர் புகைப்படம் மற்றும் காட்சி வாயிலாக சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி இது ஒரு பேசு பொருளாகி வருகிறது. இதனையறிந்த நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அந்த வீதியின் பெயர் பலகையை மறைத்து வைத்துள்ளனர். வரும் நாட்களில் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வீதிக்கு பெயர் மாற்றம் செய்யப் போவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

click me!