அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published May 25, 2023, 10:55 AM IST

திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நகராட்சியின் குப்பை வண்டியில் கொண்டு வந்து இறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் என இரு வேளைகளில் பணியாளர்கள் 12 பேர் சமையல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், நேற்று  அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினிடோர் வாகனத்தில் வந்து இறங்கியது. இதைக் கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் பசியாறும்  குறைந்த விலையில் விற்கப்படும் உணவுக்கு பயன்படுத்தப்படும் அரிசியை குப்பை அள்ளும் வாகனத்தில் சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன் - ஆளுநர் தமிழிசை

இந்த சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொது மக்களை கண்டு அதர்ச்சி அடைந்தனர், மேலும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

click me!