அரிவாளுடன் கும்பலாக பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்; 10 பேரை கொத்தாக தூக்கிய திருச்சி போலீஸ்

Published : May 22, 2023, 06:43 PM IST
அரிவாளுடன் கும்பலாக பிறந்த நாள் கொண்டாடிய ரௌடிகள்; 10 பேரை கொத்தாக தூக்கிய திருச்சி போலீஸ்

சுருக்கம்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அரிவாள், கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 ரௌடிகளை கைது செய்த காவல் துறையினர் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி மேல தெருவைச் சேர்ந்தவர் கொம்பன் ஜெகன் (எ) ஜெகதீசன் (வயது 29). இவது மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த  19ம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவை திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஒட்டி பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்.

சொந்த ஊரில் வான வேடிக்கை முழங்க கார் மீது அமர்ந்து ஊர்வலம் சென்று உள்ளார். பின்னர் நண்பர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி உள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் ஜெகனுடன்  தொடர்புடைய பல ரௌடிகள் கலந்து கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 20ம் தேதி இரவு பிறந்தநாள் விழா விருந்து என அவரது கூட்டாளிகளுக்கு கிடா கரியுடன் ஜெகன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார்.

Crime: தோப்பு வீட்டில் வசித்த கணவன், மனைவி கல்லால் அடித்து கொடூர கொலை; எஸ்பி நேரில் விசாரணை

அங்கு கூடிய கூட்டாளிகள் அரிவால், கத்தி, உள்ளிட்ட ஆயுதத்துடன் வந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான திருவெறும்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 10 பேரை  திருவெறும்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

சாலையில் திடீரென மிரண்ட மாடு; ரேக்ளா வண்டி மோதி தூக்கி வீசப்பட்ட மனைவி சம்பவ பலி

கைது செய்து காவல் துறையினர் வாகனத்தில் அழைத்து சென்றப்போது காவல் வாகனத்தில் கண்ணாடியை  தனது தலையில் மோதிகொண்டு ஜெகன் அடம் செய்து உள்ளான். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு