ராஜீவ் காந்தியின் நினைவு நாள்… திருச்சியில் அவரது சிலைக்கு காங். கட்சியினர் மரியாதை!!

Published : May 21, 2023, 05:26 PM IST
ராஜீவ் காந்தியின் நினைவு நாள்… திருச்சியில் அவரது சிலைக்கு காங். கட்சியினர் மரியாதை!!

சுருக்கம்

முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: தஞ்சையில் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திய 2 பேர் மரணம்

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்; அப்துல் வஹாப் நீக்கப்பட்டு மைதீன் கான் நியமனம்

மேலும், பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட துணைத் தலைவர்  முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது ரஃபி மாவட்டச் செயலாளர் பட்டேல் பூக்கடை பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு