Crime: திருச்சியில் அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது; 2 பெண்கள் மீட்பு

By Velmurugan s  |  First Published May 19, 2023, 6:17 PM IST

திருச்சியில் புத்தூர் ஈவி.ஆர். சாலையில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் விபசாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்த காவல் துறையினர், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


திருச்சியில் புத்தூர் ஈ.வி.ஆர் சாலையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு கவால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜ்பாபு (வயது 27) மற்றும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார் (27) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

click me!