தவறான திசையில் வந்த தனியார் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவால் கால்களை இழந்த பெண்

By Velmurugan sFirst Published May 19, 2023, 11:40 AM IST
Highlights

திருச்சியில் தவறான திசையில் சென்ற தனியார் நகரப் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்ணின் கால் மீது பேருந்து ஏறியதால் அப்பெண் படுகாயமடைந்தார்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 45). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர் திசையில் வந்த அந்த தனியார் பேருந்து அவரை கவனிக்காமல் வண்டியை எடுத்துவிட்டார். 

இதனால் முன்பக்க படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. வலியில் அலறி துடித்த அவரைக் கண்டு அப்பகுதி இருந்த மக்கள் கோபமடைந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

சட்டையில் வைத்திருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த செல்போன்; நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்

தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை  ஏற்பட்டது.

யூடியூப் லைக்குக்காக குளித்துக் கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞர்கள்; சிறப்பாக கவனித்த போலீசார்

click me!