திருச்சியில் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த விவசாயி உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் அருண்குமார்(வயது 30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். இன்று காலை அருண்குமார் தனது வயலில் நடவு செய்யப்பட்டிருந்த வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார், அப்போது அங்கு மின் கம்பத்தில் இருந்த அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பி மீது தவறுதலாக காலை வைத்துள்ளார்.
undefined
இதனைத் தொடர்ந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழனி கோவிலில் தங்க சங்கிலியை உண்டியலில் போட்ட பக்தை; கோவில் நிர்வாகத்தின் செயலால் நெகிழ்ச்சி
மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அருண்குமார் உடலை திருச்சி - கரூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இறப்புக்கு நியாயம் வேண்டும், மின்சாரத்துறை அதிகாரிகள் தற்போது வரை சம்பவ இடத்தை நேரில் வந்து பார்க்கவில்லை என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வீதியில் பிறந்த நாள் கொண்டாட்டம்; மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அத்துமீறல் - 4 பேர் கைது