
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை அருங்காட்சியகம், தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகட்டை மாணவர்களுக்கு வழங்க உள்ளதாக வெங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி முறை மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.