கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் கடந்த சில நாட்களாக உணவக உரிமையாளர்கள் ரசாயனம் கலந்த ரெடிமேட் இட்லியை பயன்படுத்துவதாகவும், இதனை உட்கொள்ளும் பட்சத்தில் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் உணவு பிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகும், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தே இங்கு பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அருகாமையில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவு அருந்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் நிலையை பயன்படுத்திக் கொள்ளும் உணவக உரிமையாளர்கள் அவர்களுக்கு தரமான உணவுப் பொருட்களை வழங்குவது கிடையாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உணவகம் ஒன்றில் சாப்பிட்ட நபர் ஒருவர் அளித்துள்ள புகாரில், நான் தொடர்ச்சியாக இந்த உணவகத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.
கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் அதிரடி விசாரணை
ஆனால், கடந்த சில தினங்களாக இந்த உணவகத்தில் இட்லியின் வடிவமும், சுவையும் வித்தியாசமானதாக இருந்தது. இது தொடர்பாக உடன் பணியாற்றுபவர்களிடம் கேட்டேன், அதற்கு இது ரசாயனம் கலந்த இட்லி என்றும், 3 முதல் 4 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற இட்லியை சாப்பிடுவதால் தொப்பை போடுவது, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையில், அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் இட்லியை சமைப்பது கிடையாது. மாறாக வெளி நபர்களிடம் வாங்கி அதனை விற்பனை செய்கின்றனர். நாங்கள் நடத்திய சோதனையில், ரசாயனமோ, வழக்கத்திற்கு மாறான பொருட்களோ கண்டறியப்படவில்லை.
ஆளுநர், முதல்வர் பிரச்சினையை ஓரங்கட்டுங்க; முதல்ல இதுக்கு தீர்வு சொல்லுங்க - அன்புமணி கோரிக்கை
அதே போல் இட்லி சமைத்து விற்கும் இத்திலும் ஆய்வு மேற்கொண்டோம், அங்கும் அதுபோன்ற ரசாயனங்கள் தென்படவில்லை. இருப்பினும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வரை இந்த முறையில் இட்லி தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.