நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்; தமிழ்புலி கட்சி சார்பில் ஆர்பாட்டம்

By Velmurugan s  |  First Published Jan 11, 2023, 12:34 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசித்து வந்த பகுதியில் இருந்த  குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகளை கலந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த டிசம்பர் 25ம் தேதியன்று மனிதக்கழிவுகள்  கலக்கப்பட்டிருந்த  சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்புலிகள் கட்சியின் சார்பில்  கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டவிரோத மது கடத்தல்; ரூ.25 லட்சம் மதுபாட்டில்கள், சொகுசு கார் பறிமுதல்

Latest Videos

undefined

ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள்  கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறையினர் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் அதிரடி விசாரணை

மேலும் நீர் தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து ஆட்சியர் கவிதா ராமு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த இரட்டை குவளை முறை, கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட அனைத்து தீண்டாமைச் செயல்களும் ஒழிக்கப்பட்டு கோவிலில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

click me!