
நாகப்பட்டினம்
பிளாஸ்டிக் அரிசி குறித்து நாகையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிக்கனும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் அரிசி விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் பரவி அனைவர் மத்தியிலும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவலையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.வி. ரவி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் நகராட்சிக்குபட்ட பெரிய கடைத்தெரு பகுதியில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன், அரிசி விற்பனைக்கடைகளில் ஆய்வு செய்தார்.
பிளஸ்டிக் அரிசி விற்பனைக்கு இருப்பது உறுதிபடுத்தப்படவில்லை. எனினும் உணவு பகுப்பாய்வுக்கு அரிசி அனுப்பப்பட்டது.
ஆய்வின்போது நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர்.மகாராஜன் உடனிருந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறியும் வழிகள் குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியது:
“ஒரு டம்ளர் தண்ணீரில் டேபிள் ஸ்பூன் அளவு அரிசியை இட்டு கலக்கினால், நல்ல அரிசி நீரின் அடியில் தங்கும், பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் மிதக்கும்.
இதேபோல் லைட்டர் மூலம் அரிசியை எரிக்கும்போது, பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.
அரிசியின் மீது கொதிக்கும் நிலையில் உள்ள சூடான எண்ணெயின் சில துளிகளை இட்டால், பிளாஸ்டிக்காக இருந்தால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளும்.
இதேபோல் பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக் அரிசியை கண்டறியலாம்.
நாகை நகராட்சிக்குட்பட்ட நாகப்பட்டினம், நாகூர், வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு மற்றும் தெற்கு பால்பண்ணைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் வந்தால், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
பிளாஸ்டிக் அரிசி விற்பது உறுதி செய்யப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.