PANI PURI : பானிபூரி கடை வைக்க ஐடியாவா.? செக் வைத்த உணவு பாதுகாப்பு துறை- வெளியான முக்கிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jul 12, 2024, 9:05 AM IST

தரமற்ற உணவுகள் சாப்பிட்டு உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமில்லாம் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தெருவோரத்தில் பாரி பூரி கடை வைப்பவர்கள் கட்டாயம் மருத்து சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
 


பானிப்பூரி கடைகளுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் வடை போண்டா கடைகள் தான் முன்பு தெருவுக்கு தெரு காட்சியளிக்கும் ஆனால் தற்போதோ பானி பூரி உள்ளிட்ட சாட் உணவு பொருட்கள் தான் மூளை முடுக்கெல்லாம் தோன்றியுள்ளது. யுடியூப்பில் வரும் விளம்பரத்தை பார்த்து ஆளாளுக்கு பானி பூரி கடையை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.

Latest Videos

ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் வருமானம் என சமூக வலைதளத்தில் பரவுவதால் ஐடி கம்பெனி வேலையை விட்டு பானி பூரி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடை தொடங்கப்படுகிறது. இதன் காரணமாக உணவுகளின் தரம் கேள்வி எழுந்துள்ளது. பல இடங்களில் அரேபிய உணவான சவர்மா சாப்பிட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பானி பூரி ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெயிட்டிங் டிக்கெட் இருக்கா? அபராதம் நிச்சயம் உண்டு.. விதிகளை மாற்றிய ரயில்வே.. நோட் பண்ணுங்க!

மருத்துவ சான்றிதழ் கட்டாயம்

 உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 250 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றில் 18 மாதிரிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை எனவும், 41 மாதிரிகளில் புற்றுநோய் ஆபத்தை விளைவிக்க கூடிய ரசாயனங்களும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  பானி பூரி விற்பனையானது தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் மண் பானையில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தற்போது நல்ல வியாபாரமாக இருக்கே என நினைத்த உள்ளூர்வாசிகளும் பானி பூரி கடையை தொடங்கிவிட்டனர். ஆனால் தரம் தான் கேள்வி குறியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் பானி பூரி மற்றும் தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பானி பூரி விற்பனை செய்வோருக்கும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல் அவசியம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காரணமாக புதிதாக பானி பூரி தொழில் தொடங்கலாம் என திட்டம் போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Vegetables Price : உயரும் காய்கறிகளின் விலை.! தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

click me!