பிரபல ஓட்டல் பரோட்டா சால்னாவில் கிடந்த பூரான்..! அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்

By Ajmal Khan  |  First Published Oct 17, 2023, 9:07 AM IST

பிரபல ஓட்டலில் பரோட்டாவிற்கு கொடுக்கப்பட்ட சால்னாவில் பூரான் கிடந்தது உணவு பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து அந்த கடை மீது உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 


ஓட்டல்களில் தரமற்ற உணவுகள்

உணவு மக்களின் வாழ்க்கையில் மிகவும் இன்றியமைதாக ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து உணவு கடைகள் நாள் தோறும் திறக்கப்பட்டு வருகிறது. மக்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு உணவு வகைகளை குக்கிராமங்களில் சமைத்தும் அசத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் சுகாதாரமன்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் வந்த வண்ணம் உள்ளது.

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன உணவுகளை அழித்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ஓட்டலில் வாங்கப்பட்ட சால்னாவில் பெரிய அளவிலான பூரான் இருந்தது உணவு பிரியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.   

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கீழப்பெரும்பள்ளம் எனும் கிராமத்தில் வசித்து வரும் பிச்சை என்பவர்,   பூம்புகார் அருகே உள்ள தர்மகுளம் கடைவீதியில் உள்ள "ஸ்டார் சி உணவகம்" என்ற புகழ்பெற்ற உணவகத்தில் நேற்று இரவு வீட்டிற்கு பார்சல் மூலம் உணவு வாங்கி வந்துள்ளார். அந்த உணவை தங்களது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று தென்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை எடுத்து பார்த்த போது மிகப்பெரிய சடை பூரான் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக உணவகத்திற்கு சென்று கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது உரிய பதில் அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கொள்ளையடிப்பதற்காக கூடிய கூட்டு குடும்பம் தான் திமுக கூட்டணி - வேலூர் இப்ராஹிம் பேச்சு

click me!