சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று முதல் ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெறவுள்ளது. “சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022” கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கும் என்றும் மகளிர் சுயஉதவி குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஹைட்ரோகார்பன் கிணறு.. புதிய பணிகளுக்கு ஓஎன்ஜிசிக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உணவு கண்காட்சி , தற்போது நடைபெறுகிறது.
சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற ‘உணவுத் திருவிழா 2022’ தொடக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. அவர்களுடன் பங்கேற்று துவக்கி வைத்தோம். pic.twitter.com/M6kEWaoNU6
— P.K. Sekar Babu (@PKSekarbabu)மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 150 அரங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி கடைலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருட்களும் இங்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதுவும் கிடையாது.
மேலும் படிக்க:ராணுவத்தில் சேர்வது லட்சுமணனின் கனவு...! கதறி அழும் தாய்.. சோகத்தில் மூழ்கிய டி.புதுபட்டி கிராமம்