ராணுவத்தில் சேர்வது லட்சுமணனின் கனவு...! கதறி அழும் தாய்.. சோகத்தில் மூழ்கிய டி.புதுபட்டி கிராமம்

Published : Aug 12, 2022, 11:43 AM IST
ராணுவத்தில் சேர்வது லட்சுமணனின் கனவு...! கதறி அழும் தாய்.. சோகத்தில் மூழ்கிய டி.புதுபட்டி கிராமம்

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளோடு நடைபெற்ற சண்டையில் தமிழக வீரர் உயிரிழந்த சம்பவம் டி.புதுப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  

இராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.இந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் தமிழகத்தில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லட்சுமணின் சொந்த ஊரான புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது தாயாரான ஆண்டாள் இராணுவ வீரரின் சிறுவயது போட்டோவை வைத்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இராணுவ வீரரின் மரணத்தால் டி.புதுபட்டி கிராமமே சோகமயமாக காணப்படுகிறது. லட்சுமணன் கடந்த 2019ஆம் ஆண்டு பி.காம் படித்து முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, ரைபிள்மேனாக பணியாற்றி வந்தார். லட்சுமணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தற்போது காஷ்மீர் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில்தான் நேற்று அதிகாலை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் லட்சுமணன் உள்ளிட்ட 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்… ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

ராணுவ மரியாதையோடு அடக்கம்

தர்மராஜ் - ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒருவர் லட்சுமணன் எனவும் அண்ணன் இராமன் பி.பி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் உள்ளவர்கள் அதகமான அளவில் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்காக சேவை செய்ய சென்ற லெட்சுமணன் நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது ஒரு விதத்தில் பெருமை அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் லட்சுமணன் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென உறவினர்கள் வேதனையோடு கூறியுள்ளனர்.  லட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக ராணுவத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக லட்சமணின் உடல் வைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

விதியை மீறிய திமுக...! நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பாஜக... குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்

முதலமைச்சர் இரங்கல்

இந்தநிலையில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன் என கூறியுள்ளார்.  வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் - மதுரை வீரர் உட்பட 3 பேர் மரணம்!


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!