திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் கடந்த 10 தினங்களுக்கு மேலாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் அருகே உள்ள இடைக்கால் விலக்கு பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவ்வழியாக சென்று கொண்டிருந்தார்.
பிரசாரத்தின் போது பெண்களை இழிவாக பேசிய அதிமுக எம்எல்ஏ; ஆத்திரத்தில் பிரசார வாகனத்தை உடைத்த மக்கள்
அப்போது அங்கு சோதனைகளில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் அவருடைய காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை முடிவில் அவர் காரில் இருந்து பணமோ, பரிசு பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அங்கு இருந்து பிரசாரத்திற்காக நயினார் நாகேந்திரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
ஏற்கனவே நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் ரயில் மூலம் 4 கோடி ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது அவருடைய கார் மற்றும் பிரசார வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.