தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

By Narendran SFirst Published Dec 12, 2022, 5:18 PM IST
Highlights

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் uள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதுமட்டுமின்றி பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1742 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளின் மெய்சிலிர்க்க வைத்த பாரதியார் நாடகம்.. நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !!

இதனால் இரு கரையோரங்களிலும் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, ஆளந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிபேடு, கோழிவாக்கம், வளத்தோட்டம், குருவிமலை, வாலாஜாபாத் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மேலும் ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. மேலும், கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்தந்த  மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

click me!