அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Dec 12, 2022, 2:54 PM IST
Highlights

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும், அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு முக்கிய நிகழ்வு எதுவும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  இது வடக்கு கேரளா -  தெற்கு கர்நாடகா கடற்கரை பகுதியில் வழியாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் செல்ல உள்ளது. மேலும்,  நாளை தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்ந்த பகுதி உருவாக கூடும்.  இது வரும் நாட்களில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து செல்லும். இதனால், அடுத்த வரும்  தினங்களுக்கு அதனுடைய பாதிப்பு எதுவும் இருக்காது. 

திமுக அரசுக்கு எதிராக அதிமுக நாளை போராட்டம்..! திடீரென ஒத்திவைத்த எடப்பாடி..?

படிப்படியாக குறையும் மழை

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாறு மற்றும் திருவள்ளூர் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார். கனமழை பொறுத்தவரை வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும்,  சென்னை மற்றும் புற நகர் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  இன்று ஒரு நாள் கனமழை பெய்யும் நாளை படிப்படியாக குறைந்துவிடும் என தெரிவித்தார்.

ரேஷன் அரிசியில் உயிருடன் இருந்த எலிக்குஞ்சுகள்..! அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்

இயல்பை விட மழை அதிகம்

வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் அக்டோபர் 1 முதல் இன்று வரையிலும் வடகிழக்கு தமிழகத்தில் மொத்தமாக 401 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பான அளவுதான். அதேபோல, சென்னையில் 756 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இயல்பான மழையின் அளவு 736 மி.மீட்டர். இயல்பை விட 16 சதவீதம் அதிகம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது.  சென்னையில் அக்டோபரில் இருந்து இந்த மாதம் 9 ஆம் தேதி முன்பு வரை இயல்பை விட 1% குறைவாக இருந்தது தற்போது இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக உள்ளது. 

இதையும் படியுங்கள்

தொடரும் கன மழை!சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை-ஆட்சியர்கள் உத்தரவு

click me!