வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் பரந்தூர்..! இந்த இடத்திலேயா விமான நிலையம் அமைக்க போறீங்க..? விவசாயி கேள்வி

By Ajmal KhanFirst Published Dec 12, 2022, 2:16 PM IST
Highlights

புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தேர்வு செய்துள்ள பரந்தூர் விமான நிலையப்பகுதியில் மழை நீர் வெள்ளக்காடாய் ஓடுவதை விவசாயி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

பரந்தூரில் புதிய விமான நிலையம்

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் கிராம மக்களோடு பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். இதனையடுத்து பரந்தூர் பகுதி விவசாய பகுதியாக இருப்பதால் மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்று இடத்தில் விமான நிலையம்

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 60 சதவீத நிலங்கள் விவசாய நிலங்களாகவும், 30 சதவீதம் நீர் நிலைகளாகவும், 10 சதவீதம் தரிசு நிலங்களாகவும் உள்ளது.  நவம்பர், டிசம்பர் மழைக் காலங்களில் பரந்தூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்புவதும் அவை கொசஸ்தலை ஆற்றின் வடிகால அமைப்பில் அமைந்துள்ளதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய பகுதிக்குள் செல்கிறது.

ஆளுநரிடம் காத்திருக்கும் 22 மசோதா.? அரசாணை வெளியிட்டீர்களா.? திமுக- பாஜக போட்டிக்கு போட்டி பேனர் வைத்து மோதல்

 வெள்ளக்காடாய் பரந்தூர் விமான நிலையம்

தற்போது ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக கனமழையானது செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து  வருகிறது. நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் பகுதியில் முட்டிங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் ஆனது தேங்கி நிற்கிறது இந்த இடத்தில் எப்படி விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்தார்கள் என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், மழைக்காலத்தில் வெள்ளக்கடை காட்சியளிக்கும் இந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தால் எப்படி செயல்படுத்த முடியும் என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

6 மாநிலத்தில் சாத்தியமான பழைய ஓய்வூதிய திட்டம்..! தமிழகத்தில் எப்போது..? ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும் ராமதாஸ்

click me!