ரேஷன் அரிசியில் உயிருடன் இருந்த எலிக்குஞ்சுகள்..! அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்

By Ajmal KhanFirst Published Dec 12, 2022, 1:53 PM IST
Highlights

ஆண்டிபட்டி அருகே உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்,ரேஷன் கடை ஊழியர்களிடம் பயணாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நியாயவிலைக்கடையில் தரம் குறைந்த அரிசி

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாகவும், வண்டுகள், பூச்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் இருந்த அரிசி மூட்டைக்குள் எலிக்குஞ்சுகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாக கூறி பொதுமக்கள்  ரேசன் அரிசியை பொதுமக்கள் சாலையில் கொட்டிவிட்டு செல்லும் நிலை கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் எலிக் குஞ்சுகள் இருந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

6 மாநிலத்தில் சாத்தியமான பழைய ஓய்வூதிய திட்டம்..! தமிழகத்தில் எப்போது..? ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும் ராமதாஸ்

ரேசன் அரிசியில் எலிக்குஞ்சுகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.  இந்த ரேஷன் கடையில் ரேஷன் அரிசி கடந்த சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மோகன் ரேசன் அரிசி வாங்கியுள்ளார். அப்போது அந்த ரேசன் அரிசியில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகுஞ்சுகள் உள்ளே இருந்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் அந்த ரேசன் அரிசியை கடை முன்பாக தரையில் கொட்டி ரேசன் கடை பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கிராம மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . 

இதையும் படியுங்கள்
பயங்கரம்! தனியார் பேருந்தில் தீ விபத்து.. நூலிழையில் 50 பயணிகள் தப்பித்தது எப்படி? திக்.. திக்.. நிமிடங்கள்.!

click me!