
.
திருநெல்வேலி
அரசு விதிமுறைகளை மீறும் விசைப்படகு மீனவர்களை கண்டித்து பத்து கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தன்குழி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின்மூலம் “விசைப்படகு மீனவர்கள் கடற்கரையில் இருந்து மூன்று கடல் மைல் தூரத்தைக் கடந்து மீன்பிடிக்க வேண்டும்” என்ற அரசு விதிமுறையை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களைக் கண்டிப்பது,
கடலில் இரவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை கண்டிப்பது” போன்றவற்றை வலியுறுத்தினர்.
இந்தப் வேலைநிறுத்தத்தில் பத்து மீனவ கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் நாட்டு படகு மீனவர்கள் பங்கேற்றனர்.