புத்தாண்டில் கைவரிசை காட்டிய மொபைல் கொள்ளையர்கள்... 24 மணிநேரத்தில்  5 பேரை கைது செய்தது தனிப்படை...!

 
Published : Jan 05, 2018, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
புத்தாண்டில் கைவரிசை காட்டிய மொபைல் கொள்ளையர்கள்... 24 மணிநேரத்தில்  5 பேரை கைது செய்தது தனிப்படை...!

சுருக்கம்

five police personnel have been detained by the police on mobile phones.

புத்தாண்டு தினத்தில் தனியாக சென்றவர்களிடம் மொபைல் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை, தி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் புத்தாண்டு தினத்தில் தனியாக சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம், மோட்டார் பைக்குகளில் வந்த மர்மநபர்கள் செல்போகளை பறித்து சென்றுள்ளனர். 

இது குறித்து காவல்நிலையத்தில் ஏராளமானோர் புகார் அளித்தனர். இதைஅடுத்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையர் ஏ. கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

இதைதொடர்ந்து தி. நகர் உதவி ஆணையர் செல்வன் தலைமையிலான , குற்றப்பிரிவு ஆய்வாளர் சேகர், உதவி ஆய்வாளர் முனிராஜ், செல்வராஜ், ஜெகநாதன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை  குழு திருடர்களை பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். 

திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு. அங்குள்ள CCTV கேமரா பதிவான காட்சிகளை  சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த CCTV பதிவில் உள்ள நபர்களை பார்த்தபோது அவர்கள் அனைவரும் ஏற்கனவே இதே போல் பல சம்பவங்களில் ஈடுபட்ட சுரேஷ், பிரதீப், ராஜா, சரவணன், லோகேஷ் என்பது தெரியயவந்தது.

இதைதொடர்ந்து செல்போன் பரிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவலர்கள் பதுங்கியிருந்து 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அதிகமான விலைமதிப்புள்ள செல்போன்களை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாம்பழம் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!