Fishing ban: இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்..! அதிகரிக்க போதுகு ஆடு,கோழியின் விலை

By Ajmal KhanFirst Published Apr 14, 2024, 9:40 AM IST
Highlights

மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக இன்று முதல் 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 
 

மீன்பிடி தடைக்காலம் அமல்

ஆழ்கடலில் தொடர்ந்து மீன் பிடிப்பதன் காரணமாக மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக  ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வருடத்தில் 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையானது இன்று ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் தரங்கம்பாடி வானகிரி திருமுல்லைவாசல் பழையாறு, சந்திர பாடி சின்னங்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் 27 கிராமங்களை சேர்ந்த 1000 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

கரை திரும்ப உத்தரவு

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகளை துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும். 61 நாட்களுக்கு கரையில் இருக்கும் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல் ,வலைகளை சீரமைத்தல் ,வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவர்.

இதற்கான ஆயத்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்  மீன்பிடி தடை காலம் காரணமாக மீன்கள் கிடைக்காத காரணத்தால் ஆடு கோழி போன்ற மற்ற இறைச்சிகளுக்கு விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஜாபர் சாதிக் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! ED சொன்ன அதிர்ச்சி தகவல்! அடுத்து சிக்கப்போவது யார்?

click me!