நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு...

 
Published : Nov 17, 2016, 09:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு...

சுருக்கம்

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

நாகை அக்கரப்பேட்டை மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர் செல்லப்பா. இவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 15-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க எட்டு பேர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை இராணுவம், இந்த மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நாகை அக்கரப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன், காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர்  படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்களை காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்து ஆம்புலன்ஸ் மூலமாக பாண்டிச்சேரி மருத்துவமனை க்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலையும் இலங்கை அரசு நடத்தாது என்று சமீபத்தி நடந்த இந்திய – இலங்கை பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது அரங்கேற்றப்பட்டு இருக்கும் இந்த துப்பாக்கிச் சூடு இலங்கை அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க தமிழகத்திற்கு தலைமை இல்லாத நேரத்தில், இந்த தாக்குதலை தட்டிக் கேட்க இந்திய அரசு முன்வருமா?

இது குறித்து தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ கூறுகையில், "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.

மேலும் அவர்கள் முதலில் மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர், அதன்பிறகு என்ன செய்வது என்று திகைத்து போய் நிற்கும் போது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பாலமுருகனுக்கு முதுகு பகுதியும், கழுத்துப் பகுதியும் மற்றொருவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த அரவிந்தன் கழுத்து, தோல்பட்டை, முதுகு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!