“மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது மத்திய அரசின் நாடகம்” – திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

 
Published : Nov 17, 2016, 08:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
“மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது மத்திய அரசின் நாடகம்” – திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

சுருக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது, நாடகம் என்பது தமிழக மீனவர்கள் மீது இன்று நடந்த  துப்பாக்கி சூட்டின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.

மீனவர் பிரச்சனை குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை  நடத்த வலியுறுத்தினார். 

மேலும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்காதது வேதனை அளிகிறது என்று தெரிவித்த அவர்,

வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!