கோவை
கோவையில் கல்வி மையமாக செயல்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தில் பட்டாசுகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்ட 2 மாணவிகள் உள்பட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஏ.பி.எஸ்.காலனியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. அதில் அந்த நிறுவனம் சார்பில் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.
இந்த மையத்தில் சிவில் சர்வீசஸ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அலுவலகம் மற்றும் அறைகளும், 1–வது, 2–வது தளங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.
அந்த வகுப்பறைகளில் கோவை உள்பட பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் சுமார் 300 பேர் படித்து வந்தனர். உள்ளூர் மாணவர்கள் பலர் தினசரி அங்கு வந்து படித்து விட்டு செல்வது வழக்கம். பிற மாவட்ட மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
மாணவிகளுக்காக அந்த பயிற்சி மைய கட்டிடத்தின் அருகில் தனி விடுதியும் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100 மாணவிகள் தங்கி இருந்து மையத்தில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து, அந்த கல்வி மைய கட்டிடத்தில் சுமார் 150 மாணவ–மாணவிகளுக்கு பயிற்சிக்கான மாதிரி தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மதியம் 3.30 மணிக்கு திடீரென கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ பிடித்தது.
இதனால் பூட்டிக்கிடந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ சடசடவென கட்டிடத்தின் மேல் தளங்களுக்கு பரவியது. இதனால் அங்குள்ள கட்டிடத்தின் கதவு மற்றும் ஜன்னல்களில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. படார் படார் என்ற சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின.
புகையுடன் கூடிய தீ, அங்குள்ள அறைகளுக்குள் புகுந்ததால் அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவ –மாணவிகளுக்கு எங்கு செல்வது? என்று தெரியாமல் சத்தமிட்டவாறு அங்கும், இங்கும் ஓடினார்கள்.
50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் விரைவாக அங்கிருந்து அந்த கட்டிடத்தின் மாடிப்படி வழியாக கீழே இறங்கினர். பல மாணவ–மாணவிகள் புகைமண்டலத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர்.
எனினும், அவர்கள் தட்டுத்தடுமாறி அந்த அறைகளை விட்டு வெளியே வந்து விட்டனர். ஆனால் 6 பேர் மட்டும் வெளியேற முடியாமல் முதல் மற்றும் 2–வது தளத்தின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதற்கிடையில் கட்டிடம் முழுவதும் தீ ஆக்கிரமித்து எரிய தொடங்கியது. இதில் கருகிய அவர்கள் அலறினர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சந்திரன் தலைமையில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்பட 8 தீயணைப்பு நிலைய வாகனங்களில் 25–க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் அங்கிருந்த பொதுமக்களும் உதவி செய்தனர். தீயை அணைக்கும் பணி ஒருபுறம் நடந்து கொண்டிந்த போதே, சில வீரர்கள் அறைகளுக்குள் புகுந்து அங்கு வெளியேற முடியாமல் மூச்சு திணறலில் தவித்துக்கொண்டிருந்த 2 மாணவிகள் உள்பட 6 பேரையும் ஒவ்வொருவராக மீட்டனர்.
அவ்வாறு மீட்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் சக்திவேல் (23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மதுரையை சேர்ந்த மாணவிகள் விஜயலட்சுமி (24), காயத்ரி (26), திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் அரங்கநாதன் (25), கோவை பச்சாபாளையத்தை சேர்ந்த கிரீஸ்ராஜா (23) ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துமணிகண்ட ராஜா (26) அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவி காயத்ரி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்து நடந்த கட்டிடத்தின் தரைத்தளத்தின் ஒரு பகுதியில், அந்த நிறுவனத்தின் சார்பில் தீபாவளிக்காக ஊழியர்கள் மற்றும் பலருக்கு பட்டாசுகளை இலவசமாக வழங்குவதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த அறைகளில் மின்சாதன பொருட்களும் பொருத்தப்பட்டிருந்தன. மில்லுக்கு தேவையான தின்னர் உள்பட இரசாயன பொருட்களும் இருந்தன.
இந்த நிலையில் அங்குள்ள மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, பட்டாசு இருந்த அறைக்குள் பரவியதால் பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த அறைக்குள் பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து கோவை வெரைட்டிஹால் ரோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் விபத்து குறித்து அறிந்ததும் உடனே சம்பவ இடத்துக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ், துணை ஆய்வாளர் இலட்சுமி மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.
வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து சோதனை நடத்தினர். விபத்து நடந்த கட்டி டத்தின் அருகே இருந்த அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் பீதியுடன் வெளியே வீதிக்கு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து கோவை மாநகர காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ் கூறுகையில், “கல்வி மைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் பட்டாசுகள் மூலம் வெடி விபத்து ஏற்பட்டதா? பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும்” என்று தெரிவித்தார்.
கல்வி மைய கட்டிடத்தி தீ விபத்து; மாணவர் ஒருவர் பலி; 5 பேருக்கு தீவிர சிகிச்சை…