
சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் பேரன் உலகநாதன் (72) உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இந்திய சுதந்திரபோராட்ட வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழகத்தை சேர்ந்த வ.உ.சிதம்பரனார். இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தி, சுதந்திரத்திற்காக பாடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ.உ.சி.யின் சொந்த ஊராகும். அவரது மகன் வழி பேரன் உலகநாதன் (வயது 72). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூர் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உலகநாதன் விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உலகநாதன் இறந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
அவருக்கு செல்வி என்ற மகளும், கண்ணன், குமார் என்ற மகன்களும் உள்ளனர். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. உலகநாதனின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.