
சென்னை, ஆர்.கே. நகரில் மரக்கடை குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை, ஆர்.கே. நகர் பகுதியில் மரக்கடை குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
தீ மளமளவென எரிந்ததை அடுத்து, பொதுமக்களில் சிலர் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனாலும், தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர், அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தீயை அணைக்க போராடினர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், பூஜை செய்து விட்டு விளக்குகளை ஏற்றி விட்டு சென்றிருக்கலாம் என்றும் அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். சிலர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும்கூறுகின்றனர். இந்த விபத்து காரணாக குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.