தி.நகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்...

 
Published : May 31, 2017, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
தி.நகர் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்...

சுருக்கம்

Fire broke out at a TNagar store in early morning hours 5 fire tenders on spot 7 people rescued fire still raging

தியாகராய நகர் சென்னை சில்க்சில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல மணி நேரமாக கரும்புகை வெளிறேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. துணிக்கடையில் இருந்து இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.. பல மணி நேரமாக கரும்புகை வெளிறேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திண்டாடி வருகின்றனர். புகை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ப்ளோரிலும் உள்ள கண்ணாடித்துண்டுகளும் வெப்பம் காரணமக வெடித்து சிதறுவதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியவில்லை.
 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!