
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்துக்கு காரணம் என்ன? …வாட்ச் மேன் இருந்திருந்தால் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்காது…
சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு வாட்ச்மேன் இல்லாததால் தூங்கிக் கொண்டிருந்த குடியிருப்பு வாசிகளை அலர்ட் பண்ண முடியவில்லை என்பது இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது பரிதாபமான விஷயம் என கூறப்படுகிறது.
வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் தரைத் தளத்தில் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக ஒரு இரு சக்கர வாகனத்தில் திடீரென தீ பிடித்தது.
இந்த தீ மளமளவென அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கானங்களுக்கு பரவியது. 20 வாகனங்களில் தீப்பற்றி எரிந்ததால் எழுந்த கரும் புகை அடுக்கு மாடி குடியிருப்புக்குள் புகுந்தது. அதிகாலை என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த கரும் புகையால் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதில் முதியவர் ஒருவர், 2 சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்ட்ட 5 பேர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு கீழ் தளத்தில் இருந்த மிசாரப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு தீப்பற்றி எரிவதைப் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த குடியிருப்பில் காவலாளி இல்லை என்றும் அதனால்தான் கீழ்தளத்தில் தீப்பிடித்தபோது யாரும் உடனடியாக தகவல் தெரிவித்து குயுருப்புவாசிகளை அலர்ட் பண்ண முடியவில்லை என கூறப்படுகிறது.