
சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. அதிக அளவிலான மக்கள் வந்து செல்லும் இந்த சூப்பர் மார்க்கெட் இன்று வழக்கம் போல செயல்படத் தொடங்கியது.
காலை 9 மணிக்கு வந்த ஊழியர்கள் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மின்சார அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
இதனால் உருவான தீ மளமளவென அடுத்த அறைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
2 வாகனங்களில் விரைந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்குப் பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.