
கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்கள் கடும் அவதியடைந்தனர். அனல் காற்று மட்டுமே வீசியது. இதனால், பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்தனர்.
சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால், அந்த மழையும் போதுமானதாக இல்லை. மக்கள் தண்ணீருக்காகவும் அலைந்து திரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் அனைத்து பகுதியிலும் வெயில் வாட்டி வதைத்தது. மாலை சுமார் 3 மணிக்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்த மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், வணியாம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரை புரண்டு ஓடியது.
மேலும் நேற்று பெய்த கனமழையில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இந்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதையொட்டி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக புல்லூரில் ஆந்திரா மாநில அரசு கட்டிய தடப்பணை நிரம்பியது.
இதனால் திம்மாம்பட்டை, அம்பலூர், கொடையாஞ்சி உள்பட பல பகுதிகளில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் வருவதால் தண்ணீருக்காக தவித்து வந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.