
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈச்சனாரி அடுத்த சிட்கோ தொழிற்பூங்காவில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்தச் சூழலில் இன்று காலை அங்குள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த மற்றொரு தொழிற்சாலையிலும் தீ பரவியது.
தீ மளமளவென கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்த மீட்புபடையினர் 4 வாகனங்களில் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. வழக்குப் பதிந்த போலீசார் தீ விபத்திற்கான காரணம் அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.