கல்லூரி வைர விழா நிகழ்ச்சி.. பங்கேற்று சிறப்பித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் - மாணவிகளோடும் கலந்துரையாடினர்!

Ansgar R |  
Published : Oct 03, 2023, 08:07 PM IST
கல்லூரி வைர விழா நிகழ்ச்சி.. பங்கேற்று சிறப்பித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் - மாணவிகளோடும் கலந்துரையாடினர்!

சுருக்கம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கலை கல்லூரியின் வைர விழா நிகழ்ச்சியில், மஇந்தூர் த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

இந்த நிகழ்வின்போது பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வின்போது பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் விண்கல மாதிரி வடிவங்களை, மத்திய அமைச்சர் பரிசாக வழங்கினார். 

தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பெண்கள் முன்னேற்றம், அரசியலில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கான தடைகளை கடப்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து மாணவிகள் மத்தியில் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசின் செயல்பாடு அடக்குமுறையின் உச்சக்கட்டம் - சீமான் ஆவேசம்

தொடர்ந்து சிறப்புரை ஆற்றியவர், 'பெண்களை மையப்படுத்திய அரசாக இல்லாமல், பெண்களுக்கான அரசாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். முன்பு பெண் குழந்தைகள் பிறந்தாலே கொல்லப்பட்டு வந்த சூழல் இருந்தது. இப்போது 'Beti bachao Beti padhao' திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் கொண்டாடப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மையை வலியுறுத்தும் வகையில் ஸ்வச் அபியான் நிகழ்ச்சிகளின் மூலம் தூய்மையான பாரதத்தை படைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறோம். பெண்கள் சமையலறை அடுப்பில் புகையில் சிக்கி பல்வேறு வகையில் நோய்வாய் பட்டு வந்தனர். இப்போது அனைவருக்கும் எல்.பி.ஜி கேஸ் கனெக்சன் கொடுக்கப்பட்டு அதற்கான மானியமும் வழங்கப்பட்டு பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம், வங்கி கடன் ஆகியவற்றில் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக முத்ரா கடன் உதவி திட்டத்தில் 65% பயனாளிகள் பெண்களாக உள்ளனர். பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இந்த சூழலில், பெண்கள் ராணுவத் துறையிலும் உயர் பதவிகளை பெற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் சுமார் ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவ்வாறு பாலின பேதம் இன்றி பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சாதனை புரிய பாஜக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாணவிகளும் இந்த திட்டங்களை பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்' என பேசினார்.

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து: ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விடாமல் மழை ஊத்தப்போகுதா? சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட்