
கரூர்
கரூரில் செல்போன் பேட்டரி வெடித்ததில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், தென்னிலை அமிர்தபுரியைச் சேர்ந்தவர் அழகேசன் மகன் விமல் (10). இவர் இங்குள்ள தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், சனிக்கிழமை இரவு இரண்டு செல்போன் பேட்டரிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, அதை கல்லால் குத்தியபோது திடீரென ஒரு பேட்டரி வெடித்துள்ளது.
இதில் அந்தச் சிறுவனின் ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வலி தாங்க முடியாமல் அலறிய சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தென்னிலை காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.