பள்ளிக்கூடத்தின் அலட்சியத்தால் மாணவர்கள் கிணற்றில் விழுந்து பலி; உறவினர்கள் போராட்டம்…

 
Published : Dec 20, 2016, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
பள்ளிக்கூடத்தின் அலட்சியத்தால் மாணவர்கள் கிணற்றில் விழுந்து பலி; உறவினர்கள் போராட்டம்…

சுருக்கம்

தூத்துக்குடி,

எட்டயபுரம் அருகே  தனியார் பள்ளிக்கூடத்தில் இருக்கும் கிணற்றில் மாணவர்கள் இருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலையும் வாங்க மறுத்து, மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் பெத்துராஜ். இவருடைய மகன் சூர்யா (13). அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வம் மகன் சேர்மத்துரை (13). இவர்கள் இருவரும் கீழ ஈராலில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள செடிகளுக்கு இருவரும் தண்ணீர் ஊற்றுவதற்காகச் சென்றனர். அப்போது கால்தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்தனர். இதில், அந்த மாணவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

நேற்று காலை இரு மாணவர்களின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதனால் உடற்கூராய்வு செய்யும் இடத்தின் அருகே மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் திரண்டிருந்தனர்.

அவர்கள் “பள்ளிக்கூட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசு நிவாரணம் மற்றும் பள்ளிக்கூடம் சார்பிலும் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் எட்டயபுரம் தாசில்தார் பாக்கியலட்சுமி, விளாத்திகுளம் துணை காவல் சூப்பிரண்டு தர்மலிங்கம், உதவி கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பள்ளிக்கூட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர், அந்த மாணவர்களின் உடலை பெற்றுச் சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!